டி20 உலக சாம்பியன் இந்தியா; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்


டி20 உலக சாம்பியன் இந்தியா; நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
x

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி,

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

2007ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற நிலையில் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்ற நிலையில் நேற்று இரவு முதல் நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுமுதல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உலகக்கோப்பையை இந்தியா வென்றதை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

1 More update

Next Story