சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் மனிஷ் கவுசிக் இறுதிப்போட்டிக்கு தகுதி


சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் மனிஷ் கவுசிக் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 9 Sep 2023 7:41 PM GMT (Updated: 9 Sep 2023 7:54 PM GMT)

முஸ்தபா ஹஜ்ருலாஹோவிச் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி போஸ்னியா நாட்டில் நடந்து வருகிறது.

புதுடெல்லி,

முஸ்தபா ஹஜ்ருலாஹோவிச் நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டி போஸ்னியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 63 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரரான மனிஷ் கவுசிக் 5-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானின் முகமது சர்வாரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அவர் இறுதிப்போட்டியில் பாலஸ்தீனத்தை சேர்ந்த முகமது சோத்தை சந்திக்கிறார்.

இதேபோல் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான மஞ்சு ராணி 5-0 என்ற கணக்கில் ஹங்கேரியின் பெட்ரா மெஸ்சியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அவர் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் சாடியா புரோமான்டை எதிர்கொள்கிறார்.


Next Story