சர்வதேச கிரிக்கெட்; ஓய்வை அறிவித்த ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன்


சர்வதேச கிரிக்கெட்; ஓய்வை அறிவித்த ஆப்கானிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன்
x

Image Courtesy: @ACBofficials

ஆப்கானிஸ்தானின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் சர்வதேச அணியில் நூர் அலி உறுப்பினராக இருந்தார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் நூர் அலி ஜட்ரான் (வயது 35). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 117 ரன்னும், 51 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1,216 ரன்னும், 22 டி20 போட்டிகளில் ஆடி 586 ரன்னும் அடித்துள்ளார்.

இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த 2009ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இந்நிலையில் நூர் அலி ஜட்ரான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2009-ல் பெனோனியில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தானின் முதல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாள் சர்வதேச அணியில் நூர் அலி உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஓய்வு முடிவால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

1 More update

Next Story