சர்வதேச டி20 கிரிக்கெட்; பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள்...உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!


சர்வதேச டி20 கிரிக்கெட்; பிறந்தநாளில் 5 விக்கெட்டுகள்...உலக சாதனை படைத்த குல்தீப் யாதவ்..!
x

Image Courtesy: @BCCI

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ஜோகன்ஸ்பர்க்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் ஆவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். முக்கியமாக நேற்று குல்தீப் யாதவ் தன்னுடையை 29வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாள் அன்று 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் பிறந்தநாளன்று 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அவர் புதிய உலக சாதனைகளை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தம்முடைய பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர் மற்றும் சிறந்த பவுலிங்கை (5/17) பதிவு செய்த பவுலர் ஆகிய 2 தனித்துவமான உலக சாதனைகளை அவர் படைத்துள்ளார்.


Next Story