சர்வதேச டி20 கிரிக்கெட்; குறைந்த இன்னிங்ஸ்களில் 2,000 ரன்கள்...விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்..!


சர்வதேச டி20 கிரிக்கெட்; குறைந்த இன்னிங்ஸ்களில் 2,000 ரன்கள்...விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்..!
x

Image Courtesy: @BCCI

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

கெபேஹா,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வந்ததால் அத்துடன் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இந்திய அணி தரப்பில் ரிங்கு சிங் 68 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து டிஎல்எஸ் முறையில் 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா 13.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 15 ரன் எடுத்தபோது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களை (56-வது இன்னிங்ஸ்) கடந்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இந்தியரான விராட் கோலியின் சாதனையை (இவரும் 56 இன்னிங்சில் எடுத்தார்) சமன் செய்தார். பாகிஸ்தானின் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (தலா 52 இன்னிங்ஸ்) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.


Next Story