ஐபிஎல் 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்..?


ஐபிஎல் 2023: மும்பைக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் சிஎஸ்கே ஆல்ரவுண்டர்..?
x

ஐபிஎல் தொடரின் இன்றைய 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

16வது ஐபிஎல் சீசன் உள்ளூர் - வெளியூர் அடிப்படையில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 10 லீக் ஆட்டங்கள் இதுவரை முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் லக்னோ, குஜராத், பஞ்சாப் அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

ஐபிஎல் தொடரின் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை 1 வெற்றி, 1 தோல்வி உடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 1 ஆட்டத்தில் மட்டுமே ஆடியுள்ள மும்பை அதில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை அணி மும்பயை வீழ்த்தி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று பயிற்சியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டத்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்றைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தை மட்டுமில்லாமல் 10 நாட்கள் அவர் ஓய்வு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story