ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே-வுக்கு எதிரான மோசமான வரலாற்றை மாற்றுமா பெங்களூரு?


ஐ.பி.எல். 2024: சி.எஸ்.கே-வுக்கு எதிரான மோசமான வரலாற்றை மாற்றுமா பெங்களூரு?
x
தினத்தந்தி 21 March 2024 10:19 AM GMT (Updated: 21 March 2024 10:33 AM GMT)

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

சென்னை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்.-ன் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை 20 முறையும், பெங்களூரு 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இதில் இந்த சீசனின் முதலாவது ஆட்டம் நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானம் உள்ளூர் அணியான சென்னை சூப்பர் கிங்சின் (சி.எஸ்.கே.) கோட்டை என்றே வர்ணிக்கலாம். இங்கு சென்னை அணி 64 ஆட்டங்களில் விளையாடி 45-ல் வெற்றியும், 19-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. 2011-ம் ஆண்டில் சேப்பாக்கத்தில் ஆடிய 8 ஆட்டங்களிலும் வாகை சூடி வீறுநடை போட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்த மைதானத்தில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்சை பெங்களூரு தோற்கடித்ததில்லை என்ற மோசமான வரலாறு உள்ளது. அந்த மோசமான வரலாற்றை இந்த முறையாவது மாற்றுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பெங்களூரு இங்கு சி.எஸ்.கே.வுக்கு எதிராக மோதியுள்ள 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வியும், ஒன்றில் வெற்றியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story