ஐ.பி.எல்.2024; லக்னோ அணியில் இணைய உள்ள கே.எல்.ராகுல், ஆனால்...- வெளியான புதிய தகவல்


ஐ.பி.எல்.2024; லக்னோ அணியில் இணைய உள்ள கே.எல்.ராகுல், ஆனால்...- வெளியான புதிய  தகவல்
x

Image : IPL

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.

லக்னோ,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், தொடையில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகிய இந்திய வீரர் லோகேஷ் ராகுல் லண்டன் சென்று சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து தற்போது அவர் உடல்தகுதியை எட்டி விட்டதாகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இணைய இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும் ஐ.பி.எல்.-ல் தொடக்ககட்ட ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் செய்வதை தவிர்க்கும்படி அவரை கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் சில ஆட்டங்களில் ஒரு பேட்டராக மட்டுமே செயல்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story