ஐ.பி.எல். 2024: ஒரே ஒரு போட்டியில் மட்டும் பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்... காரணம் என்ன?


ஐ.பி.எல். 2024: ஒரே ஒரு போட்டியில் மட்டும் பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்... காரணம் என்ன?
x

image courtesy: twitter/@rajasthanroyals

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிங்க் நிற ஜெர்சியில் களமிறங்கி விளையாட உள்ளது.

ஜெய்ப்பூர்,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த தொடரின் ஒரு போட்டியில் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முழு பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளது. ஆண்டுதோறும் பெங்களூரு அணி இயற்கையை முன்னிறுத்தி பச்சை நிற சீருடையை அணிந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின்போது பிங்க் நிற ஜெர்சியினை அணிந்து விளையாட இருக்கிறது. அந்த ஒரு போட்டியின்போது மட்டுமே பிங்க் ஜெர்சியுடன் ராஜஸ்தான் அணி விளையாடும் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு காரணம் யாதெனில்: இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கவுரவிக்கும் விதமாக பிங்க் நிற ஜெர்சியில் விளையாட இருப்பதாக ராஜஸ்தான் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஜெர்சி வெளியீட்டு நிகழ்ச்சியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Next Story