ஐ.பி.எல். 2024: தொடக்க விழாவில் கலக்க வரும் பிரபலங்கள் யார் யார்?

image courtesy: IPL
2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழா மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடைபெற உள்ளது.
சென்னை,
17-வது ஐ.பி.எல். தொடர் சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 6.30 மணி முதல் 7.30 வரை நடக்கும் தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் கலைஞர்களின் நடனம் இடம்பெறுகிறது. இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் ரசிகர்களை குதூகலப்படுத்த வருகிறார்கள். இதனால் தொடக்க விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Related Tags :
Next Story






