ஐ.பி.எல். கிரிக்கெட்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்


ஐ.பி.எல். கிரிக்கெட்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்
x

Image Courtesy: @ICC / icc-cricket.com

தினத்தந்தி 8 April 2024 12:00 PM IST (Updated: 8 April 2024 12:56 PM IST)
t-max-icont-min-icon

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. '

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி 4 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னர் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரரை அறிவிக்காமல் டெல்லி அணி ஆடி வந்தது.

இந்நிலையில் தற்போது ஹாரி புரூக்கிற்கு மாற்று வீரரை டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி புரூக்கிற்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லிசாட் வில்லியம்ஸ் டெல்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


1 More update

Next Story