ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்


ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
x

image courtesy: IndianPremierLeague twitter

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் 3 டாப் வரிசை வீரர்கள் (ரோகித் சர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ்) கோல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இஷான் கிஷான் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

ராஜஸ்தான் அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் நந்ரே பர்கர் 2 விக்கெட்டுகளும் அவேஷ் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


Next Story