ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்


ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்
x

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 38 வயது தினேஷ் கார்த்திக் 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இதனால் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டுக்கான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. மே 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஐ.பி.எல். தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தினேஷ் கார்த்திக் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐ.பி.எல்.-ல் இதுவரை 242 போட்டிகளில் விளையாடி இருக்கும் தினேஷ் கார்த்திக் 20 அரைசதத்துடன் 4,516 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 141 கேட்ச் மற்றும் 36 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.


Next Story