ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்.: ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு
x
தினத்தந்தி 10 April 2024 1:59 PM GMT (Updated: 10 April 2024 2:04 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன.

ஜெய்ப்பூர்,

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சும் , சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதுகின்றன.

இந்நிலையில் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மழை நின்றதை அடுத்து டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story