ஐ.பி.எல்; மிட்செல் ஸ்டார்க் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துவார்..? - ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு


ஐ.பி.எல்; மிட்செல் ஸ்டார்க் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துவார்..? - ஸ்டீவ் ஸ்மித் கணிப்பு
x

Image Courtesy: @KKRiders

ஐ.பி.எல் தொடரின் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி எடுத்தது.

மும்பை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட உள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்தின் போது மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து கொல்கத்தா அணி எடுத்தது.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்தார். இதையடுத்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் அவர் எவ்வாறு செயல்பட உள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் ஆர்வமான உள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் ஸ்டார்க் எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துவார் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது,

மிட்செல் ஸ்டார்க் போட்டியின் ஆரம்பத்தில் புதிய பந்திலும், ஆட்டத்தின் இறுதியிலும் பந்துவீசுவார். இதன் மூலம் அவர் அதிக விக்கெட்டுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர் நடப்பு தொடரில் 30 விக்கெட்டுகள் வீழ்த்துவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story