ஐ.பி.எல். : டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல். : டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா பேட்டிங் தேர்வு
x

Image : IPL 

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார்

விசாகப்பட்டினம்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

கொல்கத்தா: பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் அய்யர் , ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

டெல்லி: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், ரசிக் தார் சலாம், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது


Next Story