ஐ.பி.எல்.: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம்


ஐ.பி.எல்.: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மாற்றம்
x

image courtesy: PTI

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரகுமான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரகுமான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

அவருக்கு பதிலான மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரரான 16 வயதே ஆன அல்லா கசன்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story