ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 7 April 2024 1:34 PM GMT (Updated: 7 April 2024 1:54 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ - குஜராத் அணிகள் மோதுகின்றன.

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் நடைபெறும் முதலாவது போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றன.

இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறுகின்ற 2-வது ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் பந்து வீச உள்ளது.


Next Story