பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா


பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா
x

image courtesy: twitter/@KKRiders

தினத்தந்தி 29 March 2024 5:20 PM GMT (Updated: 29 March 2024 5:22 PM GMT)

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் அரைசதம் அடித்தார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , முதலில் பேட்டிங் செய்த.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் 83ரன்கள் (4 பவுண்டரி , 4 சிக்சர்) எடுத்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிய கொல்கத்தா வெறும் 16.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார்.


Next Story