ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பிய விராட் கோலி.... ரசிகர்கள் உற்சாகம்


ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பிய விராட் கோலி.... ரசிகர்கள் உற்சாகம்
x

image courtesy: PTI

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தற்போது அனைத்து அணிகளும் வீரர்களை ஒன்றினைத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்னும் அணியுடன் இணையவில்லை என்பது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய விராட் கோலி கடந்த ஜனவரி மாதமே லண்டன் பறந்தார். அவர் எதற்காக விலகினார் என்பது கேள்வி கூறியாக இருந்தது. இது குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். விரைவில் ஆர்.சி.பி. அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

1 More update

Next Story