ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து


ஆப்கானிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்த அயர்லாந்து
x

Image Courtesy: @cricketireland

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

அபுதாபி,

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சத்ரான் 53 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி 263 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 52 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 108 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் ஆப்கானிஸ்தான் சுமாராகவே விளையாடியது. இதனால் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து அயர்லாந்து அணிக்கு 111 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி 39 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் பரபரப்பாக மாறியது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் - ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் அயர்லாந்து அணி 31.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியை அயர்லாந்து பதிவு செய்துள்ளது.


Next Story