குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா


குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் - ஆஷிஸ் நெஹ்ரா
x

image courtesy; PTI

வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை குஜராத் அணி நிர்வாகம் வழங்கி உள்ளது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 10 அணிகளிலும் கழற்றி விடப்பட்ட மற்றும் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுப்பதற்கான ஏலம் துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.

இந்த ஏலத்திற்கு முன்னதாகவே குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் வாங்கியது. இதன் காரணமாக குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்;-' குஜராத் அணியில் ஹர்திக் பாண்ட்யா போன்ற திறமையும், அனுபவமும் கொண்ட ஆல் ரவுண்டரை கண்டறிவது மிகவும் கடினம். இருப்பினும் தற்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை மேம்படுத்தி வருகிறார். மேலும் வெற்றி தோல்வி குறித்து கவலைப்படாமல் சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை அணி நிர்வாகம் வழங்கி உள்ளது. அதனை அவர் சிறப்பாக செய்து காண்பிப்பார்' என்று கூறினார்.


Next Story