இந்திய மண்ணில் சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்


இந்திய மண்ணில் சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்
x

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறார்.

விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறார். அவருக்கு இப்போது வயது 41 ஆண்டு 187 நாட்கள்.

இந்த நிலையில், இந்திய மண்ணில் அதிக வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனைக்கு ஆண்டர்சன் சொந்தக்காரராகியுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வேகப்பந்து வீச்சாளர் லாலா அமர்நாத் 1952-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக தனது டெஸ்டில் ஆடிய போது அவரது வயது 41 ஆண்டு 92 நாட்களாக இருந்தது. அவரது 72 ஆண்டு கால சாதனையை ஆண்டர்சன் முறியடித்துள்ளார்.

2003-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்த ஆண்டர்சன் ஆண்டுதோறும் குறைந்தது ஒரு விக்கெட்டாவது எடுத்து இருக்கிறார். இதுவரை 184 டெஸ்டில் விளையாடி 691 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.


Next Story