ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிராக டாஸ் வென்ற யுஏஇ பந்துவீச்சு தேர்வு..!
x

Image Courtesy: @ACCMedia1

தினத்தந்தி 17 Dec 2023 5:17 AM GMT (Updated: 17 Dec 2023 5:38 AM GMT)

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வங்காளதேசம்-யுஏஇ அணிகள் இன்று மோதுகின்றன.

துபாய்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் வங்காளதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story