ரஞ்சி கிரிக்கெட் கால்இறுதியில் உத்தரகாண்ட் அணியை 116 ரன்னில் சுருட்டியது கர்நாடகா
கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் உத்தரகாண்ட் அணி 116 ரன்னில் சுருண்டது.
பெங்களூரு,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகா-உத்தரகாண்ட் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த கர்நாடக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த உத்தரகாண்ட் அணி, கர்நாடக வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 55.4 ஓவர்களில் 116 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக குணால் சண்டிலா 31 ரன்கள் எடுத்தார்.
கர்நாடகம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் 5 விக்கெட்டும், கிருஷ்ணப்பா கவுதம், வித்வாத் வீரப்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 123 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரவிகுமார் சமார்த் 54 ரன்னுடனும், கேப்டன் மயங்க் அகர்வால் 65 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.