அணியில் இடத்தை தக்க வைக்க கே.எல்.ராகுல் இதை செய்ய வேண்டும்...இல்லையென்றால் அவ்வளவு தான் - இந்திய வீரர் கருத்து


அணியில் இடத்தை தக்க வைக்க கே.எல்.ராகுல் இதை செய்ய வேண்டும்...இல்லையென்றால் அவ்வளவு தான் - இந்திய வீரர் கருத்து
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 26 Dec 2022 6:54 AM GMT (Updated: 26 Dec 2022 6:55 AM GMT)

இந்திய அணியில் தனது இடத்தை தக்க வைக்க கே.எல்.ராகுல் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என இந்திய வீரர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சென்னை,

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடரில் இந்திய அணியிப் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்றார். அவரது தலைமையில் தான் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ராகுல் ஒரு வீரராக அதிலும் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட தவறிவிட்டார்.

இவர் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட 57 ரன்கள் அடித்தார். இவர் கடந்த டி20 உலகக்கோப்பை முதலே பார்ம் இன்றி தவித்து வருகிறார். டி20 உலக கோப்பையில் கூட அவரது செயல்பாடு சிறப்பாக இல்லை. அதற்கு அடுத்து அவர் பங்கேற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், டெஸ்ட் தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.

இந்நிலையில், அதே வங்கதேசத்துக்கு ஒருநாள் தொடரில் கடைசி போட்டியில் ராகுலுடன் சேர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இஷன் கிஷன் இரட்டை சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் ஆடிய அந்த அற்புதமான் இன்னிங்ஸ் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுலின் இடத்துக்கு அந்த அளவுக்கு ஆபத்து இல்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் களம் இறக்கப்படும் தவானின் இடத்துக்கு சிக்கல் வந்துள்ளது.

அதேபோல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித்துக்கு பதிலாக ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலமாக பார்ம் இன்றி தவிக்கும் ராகுலின் இடத்துக்கு சிக்கல் வந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. அந்த தொடரிலும் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராகுல் இதை செய்யவ்வில்லை என்றால் அவரது இடத்தை பறிகொடுத்தே ஆக வேண்டும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுலுக்கு நான் 2 போட்டிகளில் வாய்ப்புகள் அளிப்பேன். ஆனால் அந்த தொடரில் ராகுலுக்கு சாதகமான விஷயங்கள் நடைபெறவில்லை என்றால், அவருக்கு எதிராக கண்டிப்பாக இந்த விஷயம் நடந்தே தீரும்.

அது என்னவென்றால் ராகுல் 40 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார், ஆனால் அவரது சராசரி 30க்கு உள்ளே தான் இருக்கிறது. ஒரு தொடக்க வீரருக்கு இவ்வளவு சராசரி தான் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 35 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய இந்திய வீரர்கள் வைத்துள்ள மிகவும் குறைவான சராசரிகளில் இதுவும் ஒன்று.

அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும். அது அவரது மனதிலும் இருக்கும் என நினைக்கிறேன். அவர் டெஸ்ட் அணியில் தனது இடத்தை தக்க வைக்க வேண்டும் என நினைத்தால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதங்கள் அடித்து குவிக்க வேண்டும். அவ்வாறு அவர் சிறப்பாக செயல்படவிலை என்றால் மிகச்சிறப்பாக ஆடி வரும் சுப்மன்கில்லினால் இந்திய அணியில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story