கொல்கத்தாவுக்கு மரண பயம் காட்டிய கிளாசன்: ஐதராபாத் போராடி தோல்வி


கொல்கத்தாவுக்கு மரண பயம் காட்டிய கிளாசன்: ஐதராபாத் போராடி தோல்வி
x

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் போராடி தோல்வியடைந்தது.

கொல்கத்தா,

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதுகின்றன.

இதில், டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரசல் 64 ரன்களையும், சால்ட் 54 ரன்களையும் குவித்தனர்.

இதையடுத்து, 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அகர்வால் 32 ரன்களிலும், அபிஷேக் 32 ரன்களிலும் அவுட் ஆகினர்.

அடுத்துவந்த திரிபாதி 20 ரன்களிலும், மார்க்ரம் 18 ரன்களிலும் அவுட் ஆகினர். ஆனால், அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். அப்துல் சமத் 15 ரன்கள் எடுத்தார்.

63 ரன்கள் குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் ரன் எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது போராடி தோல்வியடைந்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.


Next Story