கடைசி ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்


கடைசி  ஒருநாள் போட்டி: இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
x

இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

கொழும்பு,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கை அணி முனைப்பு காட்டும். அதே நேரத்தில் ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்க ஆப்கானிஸ்தான் போராடும்.

இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.


Next Story