வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டி: இந்தியா பேட்டிங் தேர்வு
x

image courtesy: BCCI twitter

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

புளோரிடா,

இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story