பிளே ஆப் சுற்று : லக்னோ- பெங்களூரு இடையிலான போட்டியில் மழை காரணமாக டாஸ் தாமதம்

Image Courtesy : Twitter @IPL
மைதானத்தில் லேசான மழை பெய்து வரும் காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் வெற்றி பெறும் அணி முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்பு காட்டும். இந்த நிலையில் தற்போது மைதானத்தில் லேசான மழை பெய்து வரும் காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
Related Tags :
Next Story






