ஐபிஎல் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வருகை

image courtesy: Chennai Super Kings twitter
ஐபிஎல் போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார்.
சென்னை,
2023-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி வருகிற மார்ச் 31-ம் தேதியன்று அகமதாபாத்தில் லீக் போட்டிகள் தொடங்குகின்றன. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story






