'அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது'...காரணம் கூறி விளக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்..!


அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது...காரணம் கூறி விளக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்..!
x

அடுத்த ஐபிஎல் தொடரிலும் ரிஷப் பந்தை பார்க்க முடியாது என தான் நினைப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் கூறியுள்ளார்.

மும்பை,

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இந்திய அணிக்காக தனி ஒருவராக பல போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த விபத்து காரணமாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் உள்ளிட்ட எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் ஆடாமல் ஓய்வில் இருந்து குணமடைந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் ரிஷப் பண்ட் விரைவாக குணமடைந்து வருவதாகவும், விக்கெட் கீப்பிங் பணியை சிறிதளவு மேற்கொண்டு வருவதாகவும் அவர் விரைவில் குணமடைவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு முதல் அவர் கிரிக்கெட் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவதை பார்க்க முடியாது என நான் நினைப்பதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சீனியர் வீரரும், இந்திய வீரருமான இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது,

ரிஷப் பந்தை அடுத்த ஐபிஎல் போட்டியிலும் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.ஏனெனில் அது சிறிய காயம் அல்ல. அது ஒரு மிகப்பெரிய விபத்து. அவர் இப்போது தான் விக்கெட் கீப்பிங் பணியை ஆரம்பித்துள்ளார். இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. விக்கெட் கீப்பர் , பேட்ஸ்மேனாக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

நல்ல விஷயம் என்னவென்றால், அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. அவர் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்திருந்தால், அவர் இன்னும் நீண்ட காலத்திற்கு வெளியே இருந்திருப்பார். அவருக்கு இப்போது ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் உலகக் கோப்பைக்கு தயாராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஐபிஎல்-க்கு உடல்தகுதி பெற்றால், அது நன்றாக இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story