காயம் காரணமாக வங்காளதேச தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்


காயம் காரணமாக வங்காளதேச தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்
x

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.

டாக்கா,

வங்காளதேசம் செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது. இந்த நிலையில், வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்துவீச்சாளார் முகமது ஷமி விலகியுள்ளார் .

பயிற்சியின்போது ஷமி காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story