மின்னல் வேகம்...! சுப்மன் கில்லை ஸ்டெம்பிங் செய்த டோனி...!


மின்னல் வேகம்...! சுப்மன் கில்லை ஸ்டெம்பிங் செய்த டோனி...!
x

குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.

அகமதாபாத்,

ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிபோட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் மோதி வருகின்றன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் குஜராத் டைட்டன்ஸ் தற்போதைய நிலவரப்படி 11 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. சஹா 47 ரன்னிலும், சாய் சுதர்ஷன்10 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார். 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் ஜடேஜா பந்து வீச்சில் ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.

6.5 வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை கில் அடிக்க முற்பட்டபோது பந்து கீப்பர் டோனி வசம் சென்றது. உடனடியாக டோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். இதன் மூலம் அதிரடி வீரர் சுப்மன் கில் அவுட் ஆனார்.

டோனி மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story