பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி


பெண்கள் பிரீமியர் லீக்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி
x
தினத்தந்தி 25 Feb 2024 11:03 PM IST (Updated: 26 Feb 2024 7:30 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

பெங்களூரு,

பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் கடந்த 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அந்த அணியின் அமெலியா கெர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 18.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் ஜெயன்ட்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.

1 More update

Next Story