நியூசிலாந்துக்கு வந்த புதிய சிக்கல்...வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு - வெளியான புதிய தகவல்...!


நியூசிலாந்துக்கு வந்த புதிய சிக்கல்...வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு - வெளியான புதிய தகவல்...!
x

Image Courtesy: AFP 

நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 3 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. காயம் காரணமாக முதல் இரு லீக் ஆட்டங்களில் ஆடாத கேன் வில்லியம்சன் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 78 ரன் எடுத்த நிலையில் இடது கையின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் ரிட்டையர் ஹர்ட்-ஆகி வெளியேறினார்.

இந்நிலையில் வில்லியம்சனுக்கு இடது கையின் கட்டை விரலில் எலும்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டங்களில் கலந்து கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை காயம் காரணமாக வில்லியம்சன் தொடரில் இருந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக டாம் ப்ளண்டெல் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story