தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
x

image courtesy; AFP

காயத்திலிருந்து மீண்ட கைல் ஜேமிசன், கேன் வில்லியம்சன் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வெலிங்டன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு டிம் சவுதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்ட கைல் ஜேமிசன், கேன் வில்லியம்சன் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு;-

டிம் சவுதி (கேப்டன்), டாம் ப்ளூன்டெல், டெவோன் கான்வே, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க் (இரண்டாவது டெஸ்ட் மட்டும்), கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்ச்செல் சான்ட்னர், நீல் வாக்னர், கேன் வில்லியம்சன், வில் யங்.


Next Story