இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!


இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
x

image courtesy; ICC

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும் அல்சாரி ஜோசப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்படாஸ்,

இந்தியாவில் நடைபெற்று வந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்தது. அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக்கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக இரு நாடுகளுக்கு இடைப்பட்ட தொடர்கள் நடைபெற உள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்றில் தோல்வியடைந்த முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

சொந்த மண்ணில் நடைபெற உள்ள அந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கான முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் அந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும் அல்சாரி ஜோசப் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு;-

ஷாய் ஹோப் (கேப்டன்), அல்ஜாரி ஜோசப் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச், மேத்யூ போர்டே, ஷிம்ரோன் ஹெட்மேயர், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, ஜோர்ன் ஓட்டேலி, ஷெர்பேன் ருதர்போர்டு,ரொமாரியோ ஷெப்பர்ட், ஓஷேன் தாமஸ்.


Next Story