இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி...!


இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து அணி...!
x

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.

வெல்லிங்டன்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவர் 18 ந் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இந்த இரு தொடருக்குமான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தொடருக்கும் வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுளார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:- டாம் லதாம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டெவான் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, ஹென்றி நிகோல்ஸ், ஹென்றி சிப்லே, டாம் லதாம், டேவான் கான்வே, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, பின் ஆலென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், டிம் சவுதி.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணி:- டிம் சவுதி (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், டாம் பிளெண்டல் (விக்கெட் கீப்பர்), டேவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, பிளெய்ர் டிக்னெர், நீல் வாக்னெர், கேன் வில்லியம்சன், வில் யங்.





Next Story