நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த வங்காளதேசம்...!


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்த வங்காளதேசம்...!
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது.

இதையடுத்து இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் ஆடிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மக்முத், ஷொரிபுல் இஸ்லாம் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறாத தமிம் இக்பால், மக்முத்துல்லா, சவுமியா சர்கார் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

நியூசிலாந்து தொடருக்கான வங்காளதேச அணி விவரம்:

லிட்டன் தாஸ் (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்கார், அனாமுல் ஹக், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, நூர்ய்ல் ஹசன் சோஹன், மஹேதி ஹசன்ம் நஸூம் அகமது, முஸ்தபிசூர் ரஹ்மான், தன்சிம் ஹசன், தன்சித் ஹசன், ஜாகிர் ஹசன், ரிசாட் ஹொசைன், கலீத் அகமது.




Next Story