பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: டாம் லதாம் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து...!


பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: டாம் லதாம் தலைமையில் களம் இறங்கும் நியூசிலாந்து...!
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

வெல்லிங்டன்,

சொந்த மண்ணில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் ஆடி வரும் நியூசிலாந்து அணி இலங்கை தொடர் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருவதால் ஐபிஎல்லில் ஆடி வரும் நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை டாம் லதாம் வழிநடத்துகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்,

டாம் லதாம் (கேப்டன்), டாம் பிளெண்டல், சாட் போவ்ஸ், மேட் ஹென்றி, பென் லிஸ்டர், கோல் மெக்கோஞ்சி, ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளெய்ர் டிக்னர், வில் யங்.



Next Story