ஒருநாள் உலக கோப்பை தொடர்...!! புதிய போஸ்டரை வெளியிட்ட ஐசிசி....!!


ஒருநாள் உலக கோப்பை தொடர்...!! புதிய போஸ்டரை வெளியிட்ட ஐசிசி....!!
x

image courtesy;twitter/@ICC

ஐசிசி நடத்தும் ஒருநாள் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

துபாய்,

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா,இங்கிலாந்து,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,பாகிஸ்தான்,வங்கதேசம்,ஆப்கானிஸ்தான்,தென் ஆப்ரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்று உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.

உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் அதில் பங்கேற்கும் 10 அணிகள் அடங்கிய புதிய போஸ்டரை ஐசிசி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது


Next Story