ஒருநாள் கிரிக்கெட் போட்டி; அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்...!


ஒருநாள் கிரிக்கெட் போட்டி; அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்...!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 13 Sept 2023 8:45 AM IST (Updated: 13 Sept 2023 11:01 AM IST)
t-max-icont-min-icon

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கொழும்பு,

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் நேற்று இந்தியாவும், நடப்பு சாம்பியன் இலங்கையும் மல்லுகட்டின.

'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி அவரும், சுப்மன் கில்லும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்கா 4 விக்கெட், மகேஷ் தீக்சனா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்னுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட் ஆக்கினர்.

இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 4 விக்கெட், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் குல்தீப் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அனில் கும்ப்ளேவின் சாதனையை குல்தீப் யாதவ் முறியடித்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் (போட்டிகள் அடிப்படையில்) வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வரிசையில் கும்ப்ளேவை முந்தி குல்தீப் யாதவ் முதலிடத்துக்கு முன்னேறினார்.

அதிவேகமாக 150 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் விவரம்:

முகமது ஷமி - 80 போட்டி

குல்தீப் யாதவ் - 88 போட்டி

அஜித் அகர்கர் - 97 போட்டி

ஜாகீர் கான் - 103 போட்டி

அனில் கும்ப்ளே - 106 போட்டி

இர்பான் பதான் - 106 போட்டி

அதிவேகமாக 150 விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விவரம்:

சக்லைன் முஷ்டாக் - 78 போட்டி

ரஷித் கான் - 80 போட்டி

அஜந்தா மெண்டிஸ் - 84 போட்டி

குல்தீப் யாதவ் - 88 போட்டி

இம்ரான் தாஹிர் - 89 போட்டி


Next Story