இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு..!


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன், டிம் சவுதி, டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.

வெல்லிங்டன்,

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இல்ங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ் தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மார்ச் 25 அன்று தொடங்க உள்ளது. மார்ச் 31 அன்று ஐபிஎல் தொடரி தொடங்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், , டிம் சவுதி, டெவான் கான்வே, மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.

அதேபோல் பின் ஆலென், லாக்கி பெர்குசன், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் ஆடி விட்டு ஐபிஎல் தொடருக்கு செல்கின்றனர். பின் ஆலென், லாக்கி பெர்குசன், க்ளென் பிலிப்ஸ் ஆகியோருக்கு பதிலாக 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் ஹென்றி நிக்கோல்ஸ், மார்க் சாம்ப்மென், பென் லிஸ்டர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு டாம் லதாம் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

நியூசிலாந்து அணி விவரம்:-

டாம் லதாம் (கேப்டன்), டாம் பிளெண்டல், சாட் பவுஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி சிப்லே, இஷ் சோதி, பிளெய்ர் டிக்னர், வில் யங்,

மார்க் சாம்ப்மென், பென் லிஸ்டர், ஹென்றி நிக்கோல்ஸ் ( 3 பேரும் 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிக்கு மட்டும், பின் ஆலென், லாக்கி பெர்ர்குசன், க்ளென் பிலிப்ஸ் ( 3 பேரும் முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும்).

இதில் பென் லிஸ்டர், சார் பவுஸ் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களம் இறங்குகின்றனர்.Next Story