'உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும்'- மேக்ஸ்வெல்லின் பேட்டிங்கை புகழ்ந்த விராட் கோலி!


உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும்- மேக்ஸ்வெல்லின் பேட்டிங்கை புகழ்ந்த விராட் கோலி!
x

image courtesy; instagram/ virat.kohli

உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 291 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் இப்ராகிம் சத்ரான் சதம் (129 ரன்) அடித்து அசத்தினார்.

இதையடுத்து 292 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் - கம்மின்ஸ் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 293 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரட்டை சதம் (201 ரன்) அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தின்போது மேக்ஸ்வெல் தசைப்பிடிப்பால் அவதியடைந்தார். வலியோடு போராடி அதிரடி காட்டிய அவர் தனது இரட்டை சதத்தினை பதிவு செய்து அசத்தினார்.

மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டத்தை பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மேக்ஸ்வெல்லின் இந்த ஆட்டத்தை இந்திய வீரரும், ஐபிஎல்-ல் சக அணி வீரருமாகிய விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், 'உங்களால் மட்டுமே இதை செய்ய முடியும். வெறித்தனம்'என பாராட்டி பதிவிட்டுள்ளார்.


Next Story