500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற 3வது அணி என்ற பெருமையை பெற்றது பாகிஸ்தான் அணி!


500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற 3வது அணி என்ற பெருமையை பெற்றது பாகிஸ்தான் அணி!
x

சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

ராவல்பிண்டி,

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story