உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விசாவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் அணி


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விசாவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் அணி
x

Image Courtesy : @TheRealPCB twitter

அணி வீரர்கள் உள்பட 33 பேர் கொண்ட பாகிஸ்தான் அணிக்கான விசா நடைமுறைக்குரிய பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்தூர்,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 6-ந் தேதி நெதர்லாந்தை ஐதராபாத்தில் சந்திக்கிறது. முன்னதாக ஐதராபாத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து (வருகிற 29-ந் தேதி), ஆஸ்திரேலியாவுடன் (அக்டோபர் 3-ந் தேதி) மோதுகிறது.

இந்த போட்டிக்காக வருகிற 27-ந் தேதி இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருக்கும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கும் வீரர்கள் உள்பட 33 பேர் கொண்ட பாகிஸ்தான் அணிக்கான விசா நடைமுறைக்குரிய பரிசீலனை நடைபெற்று வருகிறது. விசாவுக்காக காத்து இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story