சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரச்சின் ரவீந்திரா...!


சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் ரச்சின் ரவீந்திரா...!
x

Image courtesy: Icc Twitter

தினத்தந்தி 4 Nov 2023 5:22 PM IST (Updated: 4 Nov 2023 5:29 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா சதமடித்தார்.

பெங்களூரு,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஆட்டமும் அமைந்தது.

குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதில் 108 ரன்களை அவர் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று சதங்களை அவர் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இதில் 25 வயதுக்குள் அதிக உலகக்கோப்பை சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் தகர்த்தார்.

சச்சின் 22 வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை அடித்திருந்த நிலையில், 23 வயதான ரச்சின் இன்று 3 வது உலகக்கோப்பை சதத்தை அடித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.


Next Story