இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் பாதிப்பு...!


இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டி மழையால் பாதிப்பு...!
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 399 ரன்கள் குவித்துள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரர் மேதிவ் ஷாட் 9 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஆஸ்திரேலியா 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் மீண்டும் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா வெற்றிபெற 41 ஓவர்களில் 344 ரன்கள் எடுக்க வேண்டும். அதேவேளை, இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற இன்னும் 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். மழை நின்று ஆட்டம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story