குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஜெய்ப்பூர்,
16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.குஜராத் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ராஜஸ்தானும் அவர்களுக்கு நிகரான அணி என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Related Tags :
Next Story